ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

by Staff / 04-11-2022 05:47:00pm
ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் வடமாநில மக்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என சீமான் பேசி வருவதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு யார் வாக்குரிமை அளிப்பார்கள். இதுதான் பிரிவினைவாதம். பிரபாகரன் ஆமைக்கறி கொடுத்தார் என பேசிய கோமாளியின் பேச்சுபோலத்தான் இதுவும். முதலில் சீமான் தமிழனா? தமிழனே இல்லாத சீமான் இதைப்பற்றியெல்லாம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo