வடகிழக்கு பருவமழையால் இதுவரை 26 பேர் உயிரிழப்பு-தமிழக அரசு

by Editor / 05-11-2022 09:00:14pm
வடகிழக்கு பருவமழையால் இதுவரை 26 பேர் உயிரிழப்பு-தமிழக அரசு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 9 சென்டிமீட்டரும், ராமேஸ்வரத்தில் 8 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.


இதனிடையே, வடகிழக்கு பருவமழையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 2 பேரும் திருவாரூரில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மத்திய படையைச் சேர்ந்த ஆயிரத்து 149 பேரும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via