விஸ்வாமித்ரருடன் சென்ற ராமன்

by Admin / 13-11-2022 11:49:39am
விஸ்வாமித்ரருடன் சென்ற ராமன்

 


காலச்சக்கரம் சுழன்றது.தசரத சக்கரவர்த்தி தம் அமைச்சர் பெருமக்களுடன் நல்லாட்சி செய்துவந்தார்.

அவ்வேளை அரசு ஏவலாளி அரண்மனைக்குள் வந்து மாமன்னரை வணங்கி செய்தி ஒன்றை தெரிவித்தான். தங்களைக்காண மகாரிஷி விஸ்வாமித்ரர் வந்துள்ளார் என்று கூற....பதறியடித்து  தசரதன் அவரை வரவேற்று அழைத்து வர வாயில் நோக்கி ஒடினார்.

விஸ்வாமித்ரரை வணங்கி  வரவேற்று அரண்மளனக்குள் அழைத்து வந்து அமர  வைத்தார். பின்னர் தசரதன்,மாமுனியே!தங்கள் வருகையால் பெருமை கொள்கிறது  அயோத்தி..தாங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.

அதை நிறைவேற்ற அடியோன் பாக்கியமாக கருதி செய்ய விரும்புவேன் என்றார்.தசரதரே.! உமது அன்பிற்கு நன்றி.யாம் யாகம் ஒன்று நடத்தி வருகிறோம்.மாரீசனும் சுபாகு எனும் இரண்டு அரக்கர்களும்ரத்தத்தையும் மாமிசத்தையும் ெகாட்டி யாகத்தை செய்யவிடாமல் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால், அரசே!.உம்முடைய மூத்த புதல்வன் ராமன் மட்டும் தான் அவர்களை அழிக்கும் ஆற்றலுடையவன்.அவனை என்னுடன் அனுப்புங்கள்.யாம் அவனை எவ்வித தீங்கும் நிகழாதவாறு பாதுகாப்போம் என்றார்.விஸ்வாமித்ரர்.இதைக்கேட்ட தசரதன் அதிர்ந்தார்.செய்வதுஅறியாது திகைத்தார்.விக்கித்துப்போய் நின்ற தசரதன்  நா தழுதழுக்க,"ராமன் இன்னும் உரிய வயதை அடையாத பாலகன்.அரக்கர்களை எதிர்த்துப் போரிடும் ஆற்றலைப் பெறாதவன்.

அதனால் ,உங்களுடன் நான் வந்து அவ்வரக்கர்களை அழிப்பேன் "என்றார்.அதற்கு ரிஷி,"மன்னா!உன் வருகை எனக்குத்தேவையில்லை.ராமன் யார் என்பது உமக்குத்தெரியாது.அவன்வில்லாற்றல் எமக்குத்தெரியும்.அவனை அனுப்ப இயலுமா? இயலாதா?.என்று சினத்தோடு வினவ,தசரதரோ பித்துப்பிடித்தவர் போலாகி விட்டார்.தவமிருந்து பெற்ற பிள்ளையை பிரிய மனமில்லாதவராக,தம் குலக்குருவான வசிஷ்டரைஏறிட்டுப் பார்க்க ..அவரோ ,மன்னா.! விஸ்வாமித்ரருடன் ராமனை அனுப்பி வையுங்கள்.

அவன் எதற்காக ,இங்கு ஜனித்திருக்கிறானென்று உலகம் உணரும்.அச்சம் வேண்டாமென்று  கூறினார். தசரதன் அரை மனதுடன்ஒப்புக்கொண்டார்.ராமனும் லட்சுமணனும்  அவைக்கு வந்து விஸ்வாமித்ரரை வணங்கி..பணிந்து நின்றனர்.

தம் புதல்வர்கள் இருவரையும் அருகே அழைத்து விஸ்வாமித்ர மகாமுனிவர்க ட்டளைப்படி நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மூவரும் முதல் நாளில் சரயு நதிக்கரையில் கழித்தனர். அன்று  பலம்,அதி பலம் எனும் இரண்டு மந்திரங்களை ராமனுக்கும் லட்சுமணனுக்கும் விஸ்வாமித்ரர்  உபதேசித்தார். இம்மந்திரம்  பசியையும்  தாகத்தையும்  வெல்லக்கூடியது. இது அவர்கள் முதல் பேறு.

இரவு காமாஸ்ரமத்தில்  தங்கினர்.இவ்ஆசிரமத்தில் வைத்துதான் சிவபெருமான் மன்மதனை தகனம் செய்து காமத்தை அழித்ததால் ,இது காமாஸ்திரமம் என்று அழைக்கப்பட்டது. விடிந்ததும் மூவரும் அடர்ந்த வனத்திற்குள் சென்றனர்.அங்குதான் தாடகையும் அவள் வயிற்றில் பிறந்த மாரீசனும் வசித்து வந்தனர்.அவர்கள் நினைத்தவுடன் தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்திபடைத்தவர்கள்.மனிதர்களைச்சித்ரவதை செய்து நரமாமிசம் சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்.

 

Tags :

Share via