காலியாகி காத்துவாங்கும் சீனா பல்கலைக்கழகங்கள்

by Staff / 30-11-2022 02:33:13pm
காலியாகி காத்துவாங்கும் சீனா பல்கலைக்கழகங்கள்

'ஜீரோ கோவிட்' விதிமுறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது சீன அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில் சீனாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், கல்வி நிறுவனங்கள் காலியாகி வருகின்றன. மாணவர்கள் போராட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில பல்கலைக்கழகங்கள் அதிக மாணவர்களை ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்துகளை ஏற்பாடு செய்கின்றன.8 நகரங்களில் சமீபத்தில் நடந்த வன்முறை போராட்டங்களின் பின்னணியில், கோவிட் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்துவதாக சீனா சமீபத்தில் அறிவித்துள்ளது. மேலும், அதிபர் ஜி ஜின்பிங் ராஜினாமா செய்யவும் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

 

Tags :

Share via