தூத்துக்குடியில்  இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ. 10 லட்சம் மஞ்சள் பறிமுதல் - 5 பேர் கைது

by Editor / 26-06-2021 06:26:02pm
 தூத்துக்குடியில்  இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ. 10 லட்சம் மஞ்சள் பறிமுதல் - 5 பேர் கைது

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள்கள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர பகுதியில் உள்ள உள்ளூர் போலீசார், கியூ பிரிவு உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெர்மல் நகர் கடற்கரையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு மீனவர் காலனி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை அருகில் ஒரு மினி வேனிலிருந்து பைபர் படகிற்கு 84 மூட்டைகளில் 2 ஆயிரத்து 500 கிலோ விரளி மஞ்சள் ஏற்றி கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் மற்றும் விரளி மஞ்சள்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.டிபட்டவர்கள் கீழவைப்பாரை சேர்ந்த ராபிஸ்டன் (21) , விதுஸ்டன் (20), அருள் (54), சிலுவைபட்டி இந்திரா நகர் கோவிந்தப் பெருமாள் (36), தாளமுத்து நகர் சுனாமி காலனி சேர்ம ராஜா ( 19) என்பதும், இலங்கைக்கு படகு மூலம் கடத்தி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.

 

Tags :

Share via