ஆளில்லா விமானம் கண்காணிப்பு சோதனை நடத்தியது

by Editor / 05-12-2022 11:56:55pm
ஆளில்லா விமானம் கண்காணிப்பு சோதனை நடத்தியது

சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடத்தப்பட்டன. திங்கள்கிழமை பம்பா, நிலக்கல், பண்டித்தாவளம் சன்னிதான வளாகங்களில் ஆளில்லா விமானம் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பண்டிததாவளத்தில் இருந்து ஆளில்லா விமானம் புறப்பட்டு வனப்பகுதிகளை கேமராவில் படம் பிடித்தது. இது 120 மீற்றர் உயரத்தில் பறந்து 900 மீற்றர் தூரம் வரையிலான காட்சிகளை வழங்கியுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

சன்னிதானம் தனி அலுவலர் கே.ஹரிச்சந்திர நாயக் கூறியதாவது: வனப்பகுதிகள் உட்பட, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளனவா என, வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சன்னிதானத்திற்கு வெளியே உள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
 

 

Tags :

Share via