தேசிய கட்சியாக உருவெடுத்த ஆம் ஆத்மி

by Staff / 08-12-2022 04:58:24pm
தேசிய கட்சியாக உருவெடுத்த ஆம் ஆத்மி

குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.“ஆம் ஆத்மி கட்சி இன்று தேசிய கட்சியாக மாறிவிட்டது. இன்று வெளியான குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சியாக இருந்தது. இப்போது இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது” என்று கெஜ்ரிவால் கூறினார்.

 

Tags :

Share via