2024-ல தேர்தலில் பாஜக கூட்டணி தொடருமா எடப்பாடி பழனிசாமி

by Staff / 13-12-2022 05:18:49pm
2024-ல தேர்தலில் பாஜக கூட்டணி தொடருமா எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே அதிமுக - பாஜக தனித்துப் போட்டி, வருங்காலங்களில் கூட்டணி தொடரும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்தேர்தலில் இடம் ஒதுக்குவதில் அனைத்துக் கட்சிகளிலும் பிரச்னை இருக்கும். பாஜக கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. தற்போதைய தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. எதிர்வரும் தேர்தல் குறித்து அப்போது முடிவெடுப்போம். எங்கள் குழந்தைகளை வளர்த்தெடுப்பதுதான் எங்களுக்கு முதன்மையானது. எனவே அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டு பெரும்பான்மை வெற்றி பெறும்” என்றார்.மேலும் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார், பிரச்சனை நிறைவடைந்துவிட்டது என்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via