அச்சன்கோவில் ஆபரணபெட்டிக்கு உற்சாக வரவேற்ப்பு 

by Editor / 17-12-2022 08:17:03am
 அச்சன்கோவில் ஆபரணபெட்டிக்கு உற்சாக வரவேற்ப்பு 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டி கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அங்குள்ள பார்த்தசாரதி ஆலயத்தில் வைத்து பொதுமக்களின் தரிசனத்திற்குபின்னர் அங்கிருந்து ஆரியங்காவு வழியாக செங்கோட்டை தென்காசி வழியாக அச்சன்கோவில் கொண்டுசெல்லப்பட்டு சாமிக்கு அணிவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் ஐயப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.இந்த திருவிழாவை முன்னிட்டு அச்சன் கோவில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக ஐயப்பனின் கிரீடம், முகம், மார்பு, கை, கால்கள், உடல் கவசம் மற்றும் வாள் ஆகியவை அடங்கிய ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும். 

மேலும் தங்கம், வைரம் உள்ளிட்டவை பதிக்கப்பட்ட விலை உயர்ந்த இந்த ஆபரணங்கள் அச்சன் கோவில் செல்லும் வழியில் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் பொது மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த ஆபரண பெட்டி    கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.மதியம் 2 மணிக்கு தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோயில் முன்பு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.பின்னர் ஆபரணப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் அச்சன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.ஆபரண பெட்டி வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன், தலைமையில்  செய்யப்பட்டது.தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 அச்சன்கோவில் ஆபரணபெட்டிக்கு உற்சாக வரவேற்ப்பு 
 

Tags :

Share via