ஓபிஎஸ் – க்கு வக்கீல் நோட்டீஸ்

by Staff / 22-12-2022 01:23:42pm
ஓபிஎஸ் – க்கு வக்கீல் நோட்டீஸ்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். அதிமுக தலைமை உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருகிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஓ.பி.எஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via