கழிவுகள் கொட்டப்படுவார்கள் மீது கடும் நடவடிக்கை -டிஜிபி

by Staff / 26-12-2022 05:33:09pm
கழிவுகள் கொட்டப்படுவார்கள் மீது கடும் நடவடிக்கை -டிஜிபி

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் , இவர் தனது பள்ளி படிப்பைகுழித்துறையில் உள்ள விளவங்கோடு அரசுப் மேல்நிலை பள்ளியில் பயின்றார் , இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா உட்பட பெரும்பான்மையான விழாக்களில் சைலேந்திரபாபு பங்கேற்று வருகிறார், அந்த வகையில் இன்று இந்த பள்ளியின் 177 - வது ஆண்டு விழா நடைபெற்றது , இந்த விழாவில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசும் போது உலகில் நிறைய வாய்ப்புகள் உள்ளன, அரசு பள்ளியில் பயின்றாலே போதும்இங்கு படித்தவர்கள் , நான் உட்பட பெரிய பொறுப்புகளில் உள்ளனர் , மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் தொழில் அதிபராக உள்ளனர், நாம் நம்மை ஆளாக்கிய தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும், அதே போன்று நமக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், நெல்சன் மண்டேலா கூறியதைப் போன்று உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுங்கள் தமிழை , ஆங்கிலத்தை படியுங்கள் அதேபோன்று அறிவியலை , புவியியலை படியுங்கள் என அவர் பேசி அறிவுரை வழங்கினர். தொடர்ந்து அவர் செய்தியார்களிடம் பேசும் போது: சென்னையில் இருந்து 700- கி. மீட்டர் தொலைவில் உள்ள இந்த அரசு பள்ளியில் தான் நான் பயின்றேன். முதல்வர் தற்போது நமது பள்ளி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார், அதன் படி முன்னாள் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிக்கு உதவ முன் வர வேண்டும் , எங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது ஆயிரத்து 500 மாணவர்கள் இருந்தனர் , தற்பொழுது 500 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். வருங்காலங்களில் இந்த பள்ளியில் மீண்டும் 1500 மாணவர்கள் படிப்பதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம், திறமையான மாணவ , மாணவிகளும் ஆசிரியர்களும் உள்ளனர், இங்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நல்ல பரிசுகளை வழங்கி உள்ளோம், வறுமையில் வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்கான உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம், என தெரிவித்த அவர்தமிழக,கேரள எல்கை பகுதிகளில்16 - செக்போஸ்ட்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது,கேரள பகுதியிலிருந்து இறச்சி, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவர்ள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுடு வருகிறது. இரு மாநில போலீசாரிடம் மாவட்ட அளவில் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via