முதல்வர் வீட்டின் அருகே வெடிகுண்டு

by Staff / 03-01-2023 12:33:24pm
முதல்வர் வீட்டின் அருகே வெடிகுண்டு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே பஞ்சாப், ஹரியானா செயலகம் மற்றும் சட்டசபையும் அமைந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதி மிகவும் பாதுகாப்பான பகுதியாகும். வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இல்லமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via