தமிழகத்தில் வறண்ட வானிலை- வரலாற்றில் முதல்முறையாக ஒரேநாளில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள்.

by Editor / 19-04-2023 08:01:00am
தமிழகத்தில் வறண்ட வானிலை- வரலாற்றில் முதல்முறையாக ஒரேநாளில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, 20-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf இணையதளத்தை காணவும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் வரலாற்றில் முதல்முறையாக மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது"என 
- மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via