சிவகாசியில் நடைபெறும் கிராமிய திருவிழாவை துவக்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

by Staff / 05-01-2023 04:18:22pm
சிவகாசியில் நடைபெறும் கிராமிய திருவிழாவை துவக்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தற்போது உள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் கிராமம் என்ற பார்வையை நல்லவிதமாக மாற்றும் வகையில் கிராமிய விழா நடத்தப்படுகிறது .கிராமிய கலைகளை ஊக்குவிக்க தமிழகத்தில் உள்ள 12,600 பஞ்சாயத்து களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

தெருகூத்து கலையை தற்போதுள்ள மாணவர்கள் மறந்து விட்டார்கள்.இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் தமிழர்களின் பாரம்பரியத்தை அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் 

மது இல்லாமல் இந்த தலைமுறையால் வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது திடாவிட கட்சிகள் .திராவிட மாடல் என சொல்லும் ஆட்சியாளர்கள் மது வருமானம் இல்லாமல் ஆட்சி செய்ய முடியுமா? என கேள்வி.50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஆளுநர் ரவி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு.ஆளுநர் வேலை இது அல்ல, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவிற்கு அனுமதி கொடுப்பதுதான் ஆளுநர் வேலை

தமிழக அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட கூடாது.ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதவிற்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்யும் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் கொள்கை முடிவை சொல்ல வேண்டும்.ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழப்பிற்கு ஆளுநர்தான் காரணம் ஆளுனருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லைஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம் ஆனால் அரசியலில் ஈடுபட கூடாது.விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படவேண்டும்

 

Tags :

Share via