மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணச் சலுகை வழங்கப்படுமா

by Staff / 06-01-2023 04:08:09pm
மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணச் சலுகை வழங்கப்படுமா

மூத்த குடி மக்களுக்கு ஏற்கனவே இருந்தது போல் ரயில் பயண கட்டணச் சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சையில் இச்சங்கத்தில் 19வது ஆண்டு தொடக்க விழா, எட்டாவது மாவட்ட மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுந்தரகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். அகில இந்திய தலைவர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் சாமிநாதன் கௌரவிக்கப்பட்டனர். மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், துணைத் தலைவர் வெங்கடாசலம், மாநில முன்னாள் உதவிச் செயலாளர் தீனதயாளன், மாவட்டத்தை தலைவர் (தேர்வ) எஸ் சந்திரகுமாரி, மாவட்ட செயலாளர் (தேர்வு) அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ரயில் பயணத்தில் முன்பு வழங்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசும், ரயில்வே துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 2020-21, 2021 - 22 ஆம் ஆண்டுகளில் உறுதி சீட்டு அல்லாத நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது. இத்தொகையை பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags :

Share via