ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த போது மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த இளைஞர்
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் ஓடும் ரயில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 19 வயது இளைஞர் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில் சென்றபோது இளைஞர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்ததை மற்றொரு ரயிலில் வந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். அப்போது ரயில் படியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தான்.
Tags :