நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு

by Editor / 18-01-2023 08:56:28am
நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via