தாடி பாலாஜி மனைவி கைது

by Staff / 28-01-2023 04:18:28pm
தாடி பாலாஜி மனைவி கைது

எதிர்வீட்டுக்காரரின் காரை கற்களால் தாக்கிய சம்பவத்தில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மாதவரத்தில் வசித்து வரும் நித்யா, எதிர்வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆசிரியரின் கார் சேதம் அடைந்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் நித்யா கற்களை கொண்டு காரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நித்யாவை போலீசார் கைது செய்தனர். பின் நித்யா ஜாமீனில் தற்போது வெளியாகியுள்ளார்.

 

Tags :

Share via