சிறுத்தையுடன் போராடிய கன்று

by Staff / 29-01-2023 02:42:54pm
சிறுத்தையுடன் போராடிய கன்று

பொதுவாக சாது விலங்குகளான பசுக்கள் மற்றும் எருமைகள் வன விலங்குகளை கண்டால் அதிகமாக பயப்படும். ஆனால் அரிய நிகழ்வாக, தாக்க வந்த சிறுத்தையை எதிர்த்து கன்று ஒன்று போராடி தனது உயிரைக் காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறுத்தை ஒரு கன்றுக்குட்டியைக் கடித்துக் கொல்ல முயற்சிக்கிறது, ஆனால் அந்த இளம்கன்று சிறுத்தையுடன் சண்டையிடுகிறது. இறுதியில் சிறுத்தை கன்றுக்குட்டியை விட்டுவிட்டு ஓடுகிறது. இந்த சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

 

Tags :

Share via