மதுரை ஆதினம் மடத்திற்கு வர ஜனாதிபதிக்கு கோரிக்கை

by Staff / 15-02-2023 05:36:42pm
மதுரை ஆதினம் மடத்திற்கு வர ஜனாதிபதிக்கு கோரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் ஜனாதிபதி மதுரை ஆதினம் மடத்திற்கும் வருகைபுரிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வரும் பிப்ரவரி 18 தேதி காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக வருகை புரியும் இந்திய குடியரசுத் தலைவரை இந்து மக்கள் கட்சி சார்பாக வரவேற்கின்றோம்.
அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் கோவிலின் அருகில் இருக்கும் 1500 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் மதுரை ஆதீனம் மடத்திற்க்கும் இந்திய குடியரசு தலைவர் வருகை புரிய வேண்டுமென இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

Tags :

Share via