தீ விபத்து- பலத்த காயமடைந்த மூதாட்டி

by Staff / 18-02-2023 02:03:25pm
 தீ விபத்து- பலத்த காயமடைந்த மூதாட்டி

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த ராமசாமி பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்தவர் 95 வயதான முத்துலட்சுமி, இவர் நேற்று தனது வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில், சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது, அப்பொழுது எதிர்பாராத விதமாக மூதாட்டியின் புடவையில் தீப்பிடித்துள்ளது, சற்று நேரத்தில் தீ, அதிகமாக பரவியதில், மூதாட்டி அலறி துடித்துள்ளார், இவரது அலரல், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியை, மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், இது குறித்து இவரது மகன் சண்முகம், நேற்று வடவள்ளி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via