மயில்சாமி இறுதி ஊர்வலம் தொடங்கியது

by Admin / 20-02-2023 11:17:15am
மயில்சாமி இறுதி ஊர்வலம் தொடங்கியது

மறைந்த நடிகர் மயில்சாமியின் பூதவுடல் இறுதி சடங்கு செய்வதற்காக அவரது சாலிகிராம வீட்டிலிருந்து ஏ.வி.எம்மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.திரைபிரபலங்கள் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாகவந்த வண்ணமாக இருந்தனர் பிரபலநடிகர்கள்,இயக்குனர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரும் மலர்வளையம் மரியாதை  செய்ததோடு அவரது இரக்ககுணம்,உதவும் உள்ளத்தை வெளிப்படையாகப்பாராட்டனர்.அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் கூடபேசும்பொழுது அவர் மற்றவருக்காக மட்டுமே தன்னிடம் உதவிகேட்டதாகவும் ஒருநாளும்உதவுங்கள்  என்று கேட்டதில்லை என்று குறிப்பிட்டார்.நடிகர் பிரபும்நல்ல உள்ளம் கொண்டவர் என்று புகழ்ந்தார்.தாம் வாழும்பொழுதைவிட தாம் இல்லாதபொழுது தனக்காக வருபவர்களை வைத்து தான் அவர் மற்றவர்களுக்காக எப்படி வாழ்ந்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
 

மயில்சாமி இறுதி ஊர்வலம் தொடங்கியது
 

Tags :

Share via