முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 22-02-2023 08:04:15am
முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவு.

குயின் இமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொது மக்களிடம் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகை திரும்ப கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து முதலீட்டாளர்களுக்கு திரும்ப பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. இது சம்பந்தமாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு படி நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொருளாதார குற்றப்பிரிவில் புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி இரண்டு வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது கோவை பொருளாதார குற்றப்பிரிவில் 36 முதலீட்டாளர்களிடமிருந்து 5 கோடியே 65 லட்சத்து 83 ஆயிரத்து 840 ரூபாயும் மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 729 முதலீட்டாளர்களிடம் 26 கோடியே 58 லட்சத்து 32,570 ரூபாய் ஏமாற்றுப்பதற்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, இரு வழக்குகளில் நீதிமன்றம் விசாரணை முடிந்து  கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி தீர்ப்பில் இரண்டு வழக்குகளிலும் எதிரிகள் ஒன்று மயில்சாமி மற்றும் சக்திவேல் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கோயம்புத்தூர் வழக்கில் அபராதமாக  5 கோடிஏ  68 லட்சத்து 48 ஆயிரம், ஈரோடு வழக்கில் அபராதமாக 28 கோடியே 72 லட்சத்து 32 ஆயிரம் வழங்கவேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. தொகைகளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் எனவும் அபராத அபராத தொகையினை கட்டவில்லையெனில்   எதிரிகள் மேலும் இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க  வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவு.
 

Tags :

Share via