ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்நாளை நடக்கிறது

by Admin / 26-02-2023 12:53:23pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்நாளை நடக்கிறது

ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் மரணமடைந்ததை தொடர்ந்து தேர்தல் ஆணையம்தேர்தல் தேதியை அறிவித்தது. தேர்தல் தேதியை அறிவித்ததிலிருந்து ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.காங்கிரஸ் சார்பாக ஈ.வெ.கி .சம்பத் ,அ.தி.மு.க சார்பாக தென்னரசும் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை களமிறக்கின.கிட்டதட்ட ஒருமாதமாக ஈரோடு திருவிழாக்கோலம் பூண்டது பல்வேறு கட்சியினரின் வருகையால் ,பிரசாரத்தில் களைக்கட்டியது  ஈரோடு கிழக்குத் தொகுதி .முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமியும் திறந்தவெளி வாகனத்தில் வாக்குச்கசகரித்தார்.நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பல நாட்கள் ஈரோட்டில் தங்கி வாக்குச்சேகரிப்பில் முனைந்தார்.அமைச்சர் உதயநிதி,பொன்முடி,நேரு,மஸ்தான்,நாசர்,ஏ.வ.வேலு, முத்துசாமி,அ.தி.மு.க.சார்பில்
விந்தியா,செல்லூர்ராஜீ,வேலுமணி,செங்கோட்டையன்,வேலுமணி,பா.ஜ.க.மாநிலத்தலைவர் அண்ணாமலை, என அரசியல் பிரமுகர் களின் பரப்புரை தொடர்ந்தது.நேற்று ஆறு மணியோடு பிரச்சாரம்  நிறைவடைந்தததை  அடுத்து வாக்களிக்கும்  மையங்களில் சுத்தப்படுத்தும்  பணி,சானினா போடும் பணியோடு வாக்கு எந்தரங்கள் தேர்தல் நடத்தும்அலுவலர்களிடம்  வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.நாளை காலை 6.00 மணிக்கு தொடங்கும் வாக்களிக்கும் நேரம் மாலை 6.00 மணிக்கு நிறைவு பெறும்.
 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்நாளை நடக்கிறது
 

Tags :

Share via