திருப்பரங்குன்றம் - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி;43 ரயில்களின் சேவைகள் ரத்து.

by Editor / 28-02-2023 08:10:54am
திருப்பரங்குன்றம் - திருமங்கலம்  இடையே இரட்டை ரயில் பாதை பணி;43 ரயில்களின் சேவைகள் ரத்து.

தென்னக ரயில்வே மதுரைக்கோட்டம் விடுத்துள்ள வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மதுரை திருப்பரங்குன்றம் - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தொடங்கப்பட உள்ளதால்  43 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.விபரம் வருமாறு:

கேரள மாநிலம் பாலக்காடு - திருச்செந்துார் அதிகாலை, 5: 30 மணி ரயில், ராமேஸ்வரம் - மதுரை அதிகாலை, 5: 40 மணி முன்பதிவு இல்லாத ரயில், மதுரை - தேனி காலை, 8: 05 மணி ரயில் ஆகியவை மார்ச் 1 முதல் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

தேனி - மதுரை மாலை, 6: 15 மணி ரயில், மதுரை - செங்கோட்டை காலை, 11: 30 மணி ரயில், செங்கோட்டை - மதுரை காலை, 11: 50 மணி முன்பதிவு இல்லாத ரயில் மார்ச் 1 முதல் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

கோவை - நாகர்கோவில் இரவு, 7: 30 மணி விரைவு ரயில், நாளை (28ஆம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - திருநெல்வேலி மதியம், 1: 35 மணி ரயில், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இரவு 9: 00 மணி ரயில்கள், மார்ச் 1, 4ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரி - ராமேஸ்வரம் இரவு, 10: 15 மணி ரயில், மார்ச் 2, 5ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்துார் - திருநெல்வேலி காலை, 10: 15 மணி சிறப்பு ரயில், திருநெல்வேலி - திருச்செந்துார் மாலை, 4: 06 மணி சிறப்பு ரயில், நாகர்கோவில் - கோவை இரவு 9: 45 மணி ரயில், மார்ச் 1, 2, 3ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மதுரை - எழும்பூர் இரவு, 8: 50 மணி ரயில், ராமேஸ்வரம் - திருப்பதி மாலை, 4: 20 மணி வாராந்திர ரயில் ஆகியவை, மார்ச் 2ஆம் தேதியும், திருப்பதி - ராமேஸ்வரம் காலை, 11: 55 மணி வாராந்திர ரயில் மார்ச், 3ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்ட்ரல் - மதுரை இரவு, 10: 30 மணி விரைவு ரயில், மார்ச் 1, 3ஆம் தேதிகளிலும்; மதுரை - சென்ட்ரல் இரவு, 10: 50 மணி ரயில், மார்ச் 2, 5ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி - திருவனந்தபுரம் காலை, 7: 20 மணி ரயில், திருவனந்தபுரம் - திருச்சி காலை 11: 35 மணி ரயில் மார்ச் 2, 3ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.

கோவை - நாகர்கோவில் இரவு 7: 30 மணி ரயில், எஸ். எம். வி. டி. , பெங்களூரு - நாகர்கோவில் மாலை, 5: 15 மணி ரயில், மார்ச் 1, 2ம் தேதிகளிலும்; திருநெல்வேலி - ஈரோடு காலை, 6: 15 மணி ரயில், மார்ச் 2, 3, 4, 5ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

நாகர்கோவில் - தாம்பரம் மாலை, 4: 15 மணி வாராந்திர ரயில், எழும்பூர் - நாகர்கோவில் மாலை, 6: 55 மணி வாராந்திர ரயில், மார்ச் 2ஆம் தேதியிலும், நாகர்கோவில் - எஸ். எம். வி. டி. , பெங்களூரு இரவு, 7: 15 மணி ரயில், மார்ச் 2, 3ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

தாம்பரம் - நாகர்கோவில் இரவு 7. 30 மணி வாராந்திர ரயில், மார்ச்1ஆம் தேதியும், நாகர்கோவில் - எழும்பூர் மாலை 4. 15 மணி வாராந்திர ரயில் மார்ச் 3ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல், மதுரை - கோவை காலை 7. 25 மணி ரயில், மதுரை - விழுப்புரம் அதிகாலை 4. 05 மணி ரயில் மார்ச் 6ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பரங்குன்றம் - திருமங்கலம்  இடையே இரட்டை ரயில் பாதை பணி;43 ரயில்களின் சேவைகள் ரத்து.
 

Tags :

Share via