சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 15, 000, அபராதம்

by Staff / 03-03-2023 04:47:59pm
சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 15, 000, அபராதம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சூலூரை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் 23 வயதான சரவணன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் சரவணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று சரவணனுக்கு 15 ஆண்டு சிறைதண்டனையும் மற்றும் 15, 000 ரூபாய் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via