கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மரணம் - இளையராஜா இரங்கல்

by Staff / 09-03-2023 05:02:31pm
கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மரணம் - இளையராஜா இரங்கல்

தமிழ் சினிமாவின் பிரபல கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னுடன் பணியாற்றிய எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞரான சந்திரசேகர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். நாங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்த இசைக்கலைஞர்கள். நிறைய பாடல்களில் அவர் வாசித்திருக்கிற கிட்டார் உள்ளிட்ட இசை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via