தனியார் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணம் வசூலிக்க உத்தரவு

by Editor / 08-07-2021 12:30:03pm
தனியார் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணம் வசூலிக்க  உத்தரவு

 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், 'தமிழகம் முழுவதும் கொரோனா 2 ம் அலை தீவிரமடைந்து வந்ததால் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.

அதாவது கொரோனா முழு முடக்கத்தால் பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து உதவி பெறாத தனியார் பள்ளிகள் 75 % கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவற்றில் 40% கட்டணத்தை முதல் தவணையாக வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள், இரண்டாம் தவணையாக 35% பணத்தை இந்த ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கி 2 மாதங்களில் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள 25% கட்டண வசூல் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via