சென்னையில் சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது

by Staff / 01-04-2023 12:00:42pm
சென்னையில் சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில், எரியாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய விலை அறிவிக்கப்படும். இந்நிலையில், ஏப்ரல் முதல் நாளான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 76 குறைந்துள்ளது. அதன்படி ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.2,192.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எரியாவு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 

Tags :

Share via