கனவுகளே ...கனவுகளே..!

by Editor / 24-07-2021 04:58:38pm
கனவுகளே ...கனவுகளே..!

 

கனவுகள்,எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மனிதன்தான் தான் கண்ட கனவை வெளியில் சொல்லவும் அவற்றின் தன்மை குறித்து ஆராய்ந்து அறியவும் முற்படுகிறான். கனவு நல்லதாக இருந்தால் பலரிடம் சொல்லி அதற்கான பலன் என்னவாக இருக்கும் என்கிற வேட்கை உருவாக்குகிறான்…  கெட்டதாக இருந்தால் அது பற்றி வெளியில் சொன்னால் தவறு என்று கருதுகிறான்….


கனவு என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என்றும்.. நீண்ட நாள்களாக நாம் நினைத்ததின் விளைவாக உருவான எண்ண வெளிப்பாடு என்றும் பலர் கருதுகிறார்கள்… இருப்பினும், இன்றும் கனவு பற்றிய நம்பிக்கை நம்மிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது… அந்த கனவுகளில் சில என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்று காலம் காலமாக நம் முன்னோர் சொன்ன பலன்களின் அடிப்படையில் சில இங்கே…


1.    தெய்வங்களைத் தரிசிப்பது போன்று கனவு வந்தால்…. பொன், பொருள் சேர்க்கை உருவாகும்..
2.    திருமணம் நடப்பது போல கனவு கண்டால்… ஊர் – உலகம் பாராட்டும்.
3.    சாவு போன்ற நிகழ்வு பற்றிய கனவு வந்தால்… சீக்கிரம் நல்ல சுபசெய்தி ஒன்று வந்து சேரும்.
4.    பாம்பு கடிப்பது போல கனவு வந்தால்… செல்வம் வரும்… திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
ஓடுவது போலவும் தண்ணீரில் நீந்துவது போலவும் பறப்பது போலவும் கனவு வந்தால்… தடைகள் அகன்று சீக்கிரம் நல்ல நிலையை அடைவதற்கான நல்வாய்ப்பு உருவாகும்.
5.    பிரியாணி – மாமிசம் சாப்பிடுவது போல கனவு வந்தால்… திடீரென்று மிகப்பெரிய யோகம் ஒன்று வரப் போகிறது என்பதற்கான அறிகுறி…
6.    விபத்தில் சிக்கி கால் – கை ஏதாவது ஊனம் ஏற்படுவதாக கனவு வந்தால்… உங்களுக்குச் சோகமான செய்தி ஒன்று வரப் போகிறது…
7.    மழை பெய்வது – இடி இடிப்பது போல வந்தால்.. உறவுகள் பகையாக மாறுவர்.
8.    விலங்குகள் விரட்டுவது போல கனவு கண்டால்… உடல் நலம் குன்றி… மருத்துவமனையில் சேரப்போவதற்கானது…
9.    உடலில் துணி இல்லாமல் இருப்பதாக கனவு வந்தால்…. ஏதோ ஒரு வழியில் அவமானம் வரப்போகிறது.
10.    எலி – பூனை கனவில் வந்தால் வியாபார நஷ்டம், பகைவர் தொல்லை அதிகரிக்கும்.
11.    யாருக்காவது முத்தம் கொடுப்பது போல…. பழம் சாப்பிடுவது…. வீட்டில் சமைப்பது போல கனவு வந்தால்… கௌரவம் குறைவதற்கான சூழல் உருவாகும்… மற்றவர்களால் பணம், பொருள் இழப்பு ஏற்படும். அவமானம் வந்து சேரும்.
12.    அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்களைச் சந்திப்பது போல கனவு வந்தால்… செல்வாக்கு அதிகரிக்கும். பதவி வரும்… பணம் பெருகும்.
13.    தீஎரிவது போல கனவு கண்டால்… - பல துன்பங்கள் பலவழிகள் வரும்… உடல் நலம் குறையும்… பார்வை மங்கும்.
14.    ஆப்பிள், திராட்சை, வாழைப்பழங்களைச் சாப்பிடுவதாகக் கனவு வந்தால்… - உடல் நலம் பெறும்… உடல் ஆரோக்கியத்தால் மனம் புத்தெழுச்சியுடன் காணப்படும்.
15.    நண்பர்களுடன் டீ குடிப்பது போல கனவு வந்தால்.. நல்ல செய்தி வரும்…
16.    கார், பைக், சைக்கிளில் வேகமாகச் செல்வது போல கனவு வந்தால் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும்.
17.    தண்ணீர் வறண்ட குளம், ஆறு, நீர்த்தேக்கம், கிணறு போன்றவற்றைக் கண்டால், பணத்தட்டுப்பாடு, பொருளாதார இழப்பு ஏற்படும்.
18.    கோவிலில் தீப ஆராதனைச் செய்வது போல கனவு கண்டால்.. - திருமணம், குழந்தைபேறு, வீடுகட்டுதல் போன்ற சுபநிகழ்வுகள் நடக்கும்.
19.    விளக்கு அணைவதாக – இருட்டான இடத்தில் இருப்பதாக கனவு வந்தால்.. - வாழ்வில் புதிதாக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடியும்… முன்னேற்றத்திற்குத் தடை ஏற்பட்டுள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
20.    தாய், தகப்பன், அண்ணன், தம்பி உறவுகள் யாரேனும் இறப்பது போல கனவு கண்டால்… - தடைபட்ட செயல் வெற்றி அடையப்போகிறது…. வரவேண்டிய பணம், சொத்துக்கள் வந்துசேரும். தொழில் முன்னேற்றம் காணும். பதவி உயர்வு அடைவீர்கள்.
21.    பெண்கள் வளையல் உடைவது போல – மறந்து வைத்த வளையல்களை எடுப்பது போல கனவு கண்டால், - உடைவதுபோல கண்ட கனவிற்கு வீட்டில் கெட்ட நிகழ்வு சம்பவிக்கப் போகிறது என்று அர்த்தம்…. தேடி எடுப்பது போல கண்டது பணம், பொருள், சொத்து தீடீரென்று வந்து சேரும்.
-கட்டுரை -பொதிகைவாணன் 
 

 

Tags :

Share via