அதிமுகவின் தலைமையை  கட்சித் தொண்டர்கள்தான்  தேர்ந்தெடுக்க முடியும் - சசிகலா அதிரடி 

by Editor / 09-07-2021 05:03:57pm
அதிமுகவின் தலைமையை  கட்சித் தொண்டர்கள்தான்  தேர்ந்தெடுக்க முடியும் - சசிகலா அதிரடி 

 


பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா அவர்கள்,கடந்த இரண்டு மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடேயே தொலைபேசி மூலமாக பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது,தான் மீண்டும் கட்சிக்கு வருவதாகவும்,அம்மா ஜெயலலிதா போல ஆட்சியை நடத்துவதாகவும் தெரவித்தார். ஆனால்,இதற்கு அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.இதனையடுத்து,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் "சசிகலா அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை",என்று கூறினார். இதனைத் தொடர்ந்து,எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தான் ஆலோசனை கூறியுள்ளதாகவும்,சிறுவயதிலே அரசியல் முதிர்ச்சி தனக்கு வந்துவிட்டது எனவும் தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ வெளியானது.
இந்நிலையில்,சசிகலா தனது ஆதரவாளருடன் பேசும் மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.அதில்,"அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லை.அவர்களாகவே போட்டுக் கொண்டுள்ளனர். எனினும்,அதிமுகவின்  தலைமையை கட்சித் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும்.அதன்படி,தொண்டர்கள் துணையோடு அனைத்தையும் மாற்றுவேன்.அதிமுகவை நல்லபடியாக கொண்டு செல்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது",என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via