கைத்தறி கண்காட்சி, விற்பனை தொடக்க விழா

by Staff / 07-04-2023 12:32:16pm
கைத்தறி கண்காட்சி, விற்பனை தொடக்க விழா

தேசிய கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா சென்னை பாண்டியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி திடலில் நடைபெற்றது. இதை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநி திஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:தேசிய வடிவமைப்பு நிறுவனம்மற்றும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, 500 வடிவமைப்புகளின் அடிப்படையில் உருவான பட்டு காட்டன்சேலைகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 1, 200 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொருட்களை கொள்முதல் செய்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.இந்த ஆண்டு மட்டும் ரூ. 200 கோடியே 92 லட்சம் அளவுக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆட்சியின்போது ரூ. 7 கோடி நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனம் இன்றைக்கு ரூ. 9 கோடியே 46 லட்சம் லாபத்தில் இயங்குகிறது.நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் கைத்தறிஆடைகளை அதிக அளவில் வாங்கி, பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒத்துழைக்கவேண்டும் என்று கூறினார்.

 

Tags :

Share via