தமிழனை உயர்த்தும் அரசியல் தமிழகத்தில் இல்லை: அண்ணாமலை

by Staff / 14-04-2023 04:02:01pm
தமிழனை உயர்த்தும் அரசியல் தமிழகத்தில் இல்லை: அண்ணாமலை

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இவர்கள் செய்யக் கூடிய அரசியல் என்பது பாழ்பட்ட அரசியல். தமிழ் சமுதாயத்தை எந்த விதத்திலும் உயர்த்தக் கூடிய அரசியல் இது இல்லை. எப்படி உயர்த்த வேண்டும் என்று அரசியல் நடைபெறவில்லை.

சொத்துப் பட்டியலை பார்க்கும் போதே நமக்கு தெரியும். 12 பேரின் சொத்து மட்டும் தான் இது. இவர்களை எதிர்த்து ஒரு சாமானிய மனிதன் தேர்தலில் போட்டியிட்டு எப்படி வெற்றி பெற முடியும். தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் கே. என். நேருவை எதிர்த்து திருச்சியில் தேர்தலில் எப்படி நிற்க முடியும். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை. இது தமிழகத்தின் ஜனநாயகத்திற்கான போராட்டம். மக்கள் மன்றத்தில் லஞ்சத்தை முக்கியமான விஷயமாக மாற்றவில்லை என்றால் தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரிய கேடு காத்துக் கொண்டிருக்கிறது.

நிறைய எதிரிகளை இன்று சம்பாதித்துவிட்டேன். ஒரே செய்தியாளர் சந்திப்பில் நிறைய எதிரிகளை சம்பாதித்துவிட்டேன். பெரிய, பெரிய எதிரிகளை சம்பாதித்து விட்டேன். தமிழக அரசியலை பொறுத்த வரையில் இதை எல்லாம் பேசாமல் இருப்பார்கள். நான்கு வருடம் எதிர்க் கட்சியாக இருந்து விட்டு, கடைசி 6 மாதம் 2 அறிக்கை கொடுப்பார்கள். 2 போராட்டம் நடத்துவார்கள். தேர்தல் வந்துவிடும். 4 சதவீதம் ஓட்டு மாறும். ஆட்சி மாறி விடும் என்று அவர் பேசினார்.

 

Tags :

Share via

More stories

Logo