ஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்

by Editor / 24-07-2021 07:26:55pm
ஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்

 

(ஜூலை 12 பிறந்தநாள் )

நா.முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர்.[3] நான்கு வயதில் தாயை இழந்தவர்.

சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார்.

இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் , 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

 

Tags :

Share via