ஆம்னி பேருந்து தீயில் எரிந்து நாசம்

by Staff / 30-04-2023 01:07:38pm
ஆம்னி பேருந்து தீயில் எரிந்து நாசம்

குஜராத் மாநிலத்தில் பேருந்து ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. மனோரில் இருந்து சரோட்டி நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து சில நொடிகளில் பேருந்து முழுவதும் தீ பரவியது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்தின்போது பேருந்தின் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை கீழே இறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

Tags :

Share via