உலக செஸ் சாம்பியனான முதல் சீன வீரர்

by Staff / 01-05-2023 02:33:40pm
உலக செஸ் சாம்பியனான முதல் சீன வீரர்

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் சீன வீரர் என்ற பெருமையை டிங் லிரன் படைத்துள்ளார். கஜகஸ்தானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் இயன் நெபோம்னிஷியை லிரன் எதிர்கொண்டார். 14 ஆட்டங்களில் இருவரும் 7-7 என சமநிலை பெற்றதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நேற்று டைபிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இதில் 2.5-1.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற லிரன் சாம்பியன் மகுடத்தை சூடினார். கடந்த 10 ஆண்டுகளாக உலக செஸ் சாம்பியனாக இருந்த மேக்னல் கார்ல்சன், இப்போட்டியிலிருந்து விலகியதையடுத்து டிங் லிரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

 

Tags :

Share via