ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் - பாஜக அறிவிப்பு

by Staff / 01-05-2023 02:37:28pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் - பாஜக அறிவிப்பு

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ், பாஜக கட்சிகள் மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடக தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையை, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், தினமும் அரை லிட்டர் பால் இலவசம் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. வீடு இல்லாத ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via