ரூ.2.25 கோடி மோசடி செய்த பலே பெண் கைது

by Staff / 03-05-2023 01:14:47pm
ரூ.2.25 கோடி மோசடி செய்த பலே பெண் கைது

கேரளாவின் ஆலப்புழா அருகே காயம்குளத்தில், ஒருவரிடம் ரூ.2.25 கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். காயம்குளம் கீரிகோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், சங்கனாச்சேரியைச் சேர்ந்த சஜ்னா சலீம் (41) என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான சஜ்னா, ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் ஆடை இறக்குமதி செய்யும் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி அவரை ஏமாற்றிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். முதலீட்டாளருக்கு அதிக லாபம் தருவதாக உறுதியளித்து ஏமாற்றியுள்ளார். இவரது கணவரும், இரண்டாவது குற்றவாளியுமான அனஸ், வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo