நடுவானில் விமானத்தில் பெண்கள் அடிதடி

by Staff / 03-05-2023 01:10:38pm
நடுவானில் விமானத்தில் பெண்கள் அடிதடி

ஆஸ்திரேலியாவில் நடுவானில் பெண் பயணிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கெய்ர்ன்ஸில் இருந்து வடக்கு ஆஸ்திரேலியா நோக்கி விமானம் ஒன்று சென்றுள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணிகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர், சக பயணியை கண்ணாடி பாட்டிலால் தாக்க முயற்சித்தார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானம் அவசரமாக குயின்ஸ்லாந்தில் தரையிறக்கப்பட்டது. இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via