கொடிக்கம்பம் வைப்பதில் இருபிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல்.போலீசார் குவிப்பு.

by Editor / 03-05-2023 10:25:38pm
கொடிக்கம்பம் வைப்பதில் இருபிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல்.போலீசார் குவிப்பு.

தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேலப்பாவூர் பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சாலை ஓரத்தில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது இந்த பேருந்து நிலையத்தில் அருகில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் கோவில் திருவிழா நடப்பது முன்னிட்டு அங்கிருந்த சாலையோர பேருந்து நிறுத்தத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள் கோவில் கொடை விழா குறித்து சுவரொட்டிகளை பேருந்து நிலையத்தில் ஒட்டியுள்ளனர் இதன் தொடர்ச்சியாக கோவில் திருவிழாவிற்கு முக்கிய பிரமுகர் ஒருவரை அழைத்து வந்துள்ளனர் அழைத்து வரும் வழியில் அந்த சமுதாயத்தின் உடைய  கொடி கம்பத்தை சாலையோர பேருந்து நிறுத்தத்தில் அருகில் நட்டு அதில் கொடியேற்றம் நடந்துள்ளது இதனை தொடர்ந்து அந்த பகுதியில் குறிப்பிட சமுதாயத்தின் கொடி ஏற்றம் நடந்ததை தொடர்ந்து அதே பகுதியில் நிறைந்திருக்கும் மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் சில போலீசார்களை நியமித்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் அந்த வழியைச் சென்ற குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த நபர் தமது பகுதியில் மாற்று சமுதாயத்தைச் சார்ந்த கொடிக்கம்பம் நடப்பட்டதை தொடர்ந்து மதுபோதையில் இருந்த அவர் அந்த கொடி கம்பத்தை கொடிய அகற்றி விட்டு சென்றதாக கூறப்படுகிறது இதனை மற்றொரு பிரிவை சார்ந்த சமுதாயத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட தற்காலிக கொடி கம்பத்தை உடனடியாக அகற்றி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற நிலையில் கொடிக்கம்பத்தை நட்ட சமுதாயத்தினர் திரண்டு வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதன் தொடர்ச்சியாக நேற்று இரண்டாம் தேதி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் மேலும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் சம்பவ இடத்திற்கு கலவரம் ஏற்பட்டால் கலவரக்காரர்களை விரட்டும் வகையில் பீச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மேலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் குவிக்கப்பட்டுபாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via