மேற்கு அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம்  கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 10-05-2023 08:42:15am
 மேற்கு அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம்  கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட  மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம், கடலறிப்பு ஏற்பட்டுள்ளதால் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
 

 

Tags :

Share via