திறமையின் தொழிற்சாலை இந்தியா - மோடி பேச்சு

by Staff / 23-05-2023 04:36:17pm
திறமையின் தொழிற்சாலை இந்தியா - மோடி பேச்சு

மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இடையே மேடையில் பேசினார். அவர் கூறியதாவது "இந்தியாவில் திறமைக்கும் வளங்களுக்கும் பஞ்சமில்லை. இந்தியா இன்று மிகப்பெரிய மற்றும் இளைய திறமை தொழிற்சாலையாக உள்ளது. விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியாவை ஆஸ்திரேலியாவுடன் இணைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என பல தரப்பு மொழி மக்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். இந்தியா - ஆஸ்திரேலியா உறவு பரஸ்பர நம்பிக்கை, மரியாதையால் உருவானது" என்று கூறினார்.

 

Tags :

Share via