5 வயது குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்

by Staff / 24-05-2023 01:20:25pm
5 வயது குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக 3 வயது வரை கட்டணமில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு பாதி டிக்கெட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. தற்போது 5 வயது வரை கட்டணமில்லாமல் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Tags :

Share via