ஸ்பைஸ் ஜெட் பைலட்டுகளின் சம்பளம் 7.5 லட்சமாக உயர்வு

by Staff / 24-05-2023 01:35:34pm
ஸ்பைஸ் ஜெட் பைலட்டுகளின் சம்பளம் 7.5 லட்சமாக உயர்வு

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்டுகளின் மாத சம்பளம் ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளாக நிறுவனம் அறிவித்துள்ளது. மாதத்தில் 75 மணி நேரம் பறக்கும் விமானிகளுக்கு இது பொருந்தும். நிறுவனத்தின் 18ஆம் ஆண்டு விழாவையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் சம்பளத்தில் சிறிய மாற்றங்களை நிறுவனம் செய்திருந்தது. மட்டுமல்லாது ஏர்லைன், கேப்டன்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via