த்ரிஷாவை பற்றி தவறாக பேசவில்லை - மன்சூர் அலி கான்

by Staff / 21-11-2023 12:51:56pm
த்ரிஷாவை பற்றி தவறாக பேசவில்லை  - மன்சூர் அலி கான்

நடிகை த்ரிஷா பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் சென்னையில் மன்சூர் அலி கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டிதான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் அந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via