சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து - மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி.

by Editor / 27-05-2023 09:27:42pm
சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து -  மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி.

கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஏக்ரா பகுதி மக்களை இன்று சந்தித்தார். அப்போது சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்துக்காக மம்தா பானர்ஜி மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்துக்காக நான் தலை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உளவுத்துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இந்த வெடிப்பைத் தடுத்திருக்கலாம் என தெரிவித்தார்.மேலும், வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீட்டு காசோலைகளை வழங்கினார். குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் உறவினர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கினார். குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பத்தில் இருந்து தலா ஒருவருக்கு வீட்டுக் காவலர் பணிகளுக்கான நியமனக் கடிதங்களையும் அவர் வழங்கினார்.

 

Tags : An illegal firecracker factory exploded in the Agra area of ​​Purba Medinipur district of West Bengal.

Share via