புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

by Admin / 28-05-2023 01:12:53am
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ,தமிழகத்தில் இருந்து வந்த ஆதினங்கள், மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து மந்திரங்கள் முழங்க செங்கோல் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளை வழங்கினர்.. 888 உறுப்பினர்கள் அமரக்கூடிய புதிய பாராளுமன்ற  கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.. மக்களவையில்  மொத்தம் 1,280 உறுப்பினர்கள் இடம் பெறலாம்...
 டிசம்பர் 10, 2020 அன்று பிரதமர் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
. பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மக்களவை மற்றும் ராஜ்யசபா தீர்மானங்களை நிறைவேற்றியது.
. டாடா  மூலம் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில், பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், எம்.பி,ஓய்வு அறை,  நூலகம், உணவகம் , ஏராளமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை இருக்கும்..
. முக்கோண வடிவிலான நான்கு மாடி கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது...  ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25ஆதரவு கட்சிகள் பங்கேற்பார்கள்.
, 2 0 க்கு மேற்பட்ட எதிர்க்கட்சிகள்திறப்பு விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
 

Tags :

Share via