மலைமேல் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு.

by Editor / 29-06-2023 09:21:35am
மலைமேல் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு. மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள சிக்கந்தர் அவுலியா தர்கா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்., இந்த நிலையில் மலை மேல் தொழுது நடத்தக் கூடாது என சில இந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொழுகை நடத்தப்படக்கூடாது என்று வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மலையில் மேல் தர்கா அமைந்திருப்பதால் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தொழுகை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறப்பு தொழுகை செய்ய மலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமியர்களை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து., செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரையும் தடுத்து நிறுத்தப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்., திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என காவல்துறையினர் அறிவுறுத்தனர். மேலும்., மலைக்கு மேல் தொழுகைக்கு சென்ற இடத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் தொழுகை நடத்தப்படக்கூடாது என பிளக்ஸ் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.பிளக்ஸ் வைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பரங்குன்றம் கோவில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலைமேல் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு.
 

Tags :

Share via