ஆகஸ்டில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கிறது சவூதி

by Staff / 04-07-2023 02:50:50pm
ஆகஸ்டில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கிறது சவூதி சவூதி அரேபியாவும் ஆகஸ்டில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளதால் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 75 டாலருக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதியை குறைக்கும் ரஷ்யாவின் தீர்மானத்தை தொடர்ந்து, சவூதி அரேபியாவும் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பரில் டெலிவரி செய்யப்படும் பிரண்ட் கச்சா எண்ணெய் 0.54% உயர்ந்து பேரலுக்கு 75.05 டாலராக இருக்கும். ஆகஸ்டில் டெலிவரி செய்யப்படும் அமெரிக்க கச்சா எண்ணெய் 0.54% உயர்ந்து 7.17 டாலராக அதிகரிக்கும். விலையை கட்டுப்படுத்த ஒபெக்கும், சக நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டதால் இந்த ஆண்டு இதுவரை எண்ணெய் விலை 11% குறைக்கப்பட்டது.
 

Tags :

Share via