முதல்வர் நடத்திய திருமணம் கருணை உள்ளத்தோடு நடத்தப்பட்ட திருமணம் என சேகர்பாபு தகவல்.

by Editor / 09-07-2023 10:01:31am
முதல்வர் நடத்திய திருமணம் கருணை உள்ளத்தோடு நடத்தப்பட்ட திருமணம் என சேகர்பாபு தகவல். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி கோவூரில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் அமைக்கும் பூஜையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி:<br /> குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான கோவில் நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்குகிறது இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு திருத்தேர் சிதலமடைந்ததால் இந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மரத் திருத்தேர் செய்யும் அரசாணை வெளியிடப்பட்டது. அதற்காக கோவிலின் நிதி மூலம் 49.50 லட்சமும், நன்கொடையாக ரூ.49.50 லட்சம் என மொத்தம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் திருதேர் செய்ய முடிவு செய்யப்பட்டது இதற்கான பூஜை இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு தேர் செய்வதற்கான பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இந்த தேரானது 36 அடி உயரமும், 14 அடி அகலமும், 5 அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது தேர் பணிகள் முடிந்து வீதி உலா வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்த ஆட்சியில் 51 மர தேர்கள் ரூ. 31 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில்தான் கோவில்களில் குடமுழுக்குகள் அதிகமாக நடைபெற்று வருகிறது,<br /> 123 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிகேஸ்வரர் பெருமாள் கோவிலில் குடமுழக்கு கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது,876 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது,இந்த கோவிலில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பாலாலயம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்<br /> மனிதாபிமானத்தோடு இறை அண்பர்கள் இறை நம்பிக்கை கொண்டதன் காரணமாக திருக்கோயில்களில் இந்து சமய அறநிலை துறை சார்பில் திருமணம் செய்ய முடிவெடுத்து திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு 500 திருமணங்கள் அறிவித்து 34 திருமணங்களை முதல்வர் நடத்தி வைத்தார். அன்று மட்டும் தமிழகம் முழுவதும் 219 திருமணங்கள் நடந்தது. முதல்வர் நடத்திய திருமணம் கருணை உள்ளத்தோடு நடத்தி வைத்த திருமணம், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய திருமணம் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட திருமணம் விளம்பரத்திற்காக நடத்தப்படும் திருமணங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு அண்ணாமலை நடத்தி வைத்த திருமணமே சாட்சி என தெரிவித்தார்.<br /> &nbsp;
 

Tags :

Share via